சென்னை விமான நிலையத்தில் 24 கிலோ கொண்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த 2 இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டனர். பின்னர் அவர்களிடம் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 24 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

இந்த தங்கத்தை ஸ்கர்ட் போன்ற உள்ளாடையில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட 24 கிலோ தங்கத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

 

தங்கம் கடத்தி வந்த ஹேன்பியோல் ஜுங் மற்றும் ஏன்யங் கிம் பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.