வணிகர்களுக்கு அலர்ட்.! கடைகளில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கவில்லையா..? எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி
இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி இதுவரை ரூ.1,04,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குப்பைகளை தரம்பிரிக்கும் மாநகராட்சி
மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டி வைக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஏற்பாடு... நவ.28 முதல் டிச.31 வரை சிறப்பு முகாம்!!
கடைகளில் இரண்டு குப்பை தொட்டி
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 85,477 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 43,835 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு குப்பைத் தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,04,900/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்கவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி