மக்களே உஷார்!! மழைநீர் வடிகால் பணிகள்.. முக்கிய சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள்..மாநகராட்சி புது உத்தரவு

சென்னை மாநகராட்சியில் இதுவரை மழைநீர் வடிகால் பணிகளைத் தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 
 

Chennai Corporation has issued important orders regarding rainwater drainage works

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க:அலர்ட் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை.. இன்று இந்தெந்த மாவட்டங்களில் கனமழை..

இந்த கூட்டத்தில் கசடு சேகரிப்பு தொட்டி ஒவ்வொரு ஐந்து மீட்டர் இடைவெளி வீதம் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கசடு சேகரிப்பு தொட்டி இல்லாமல் இருந்தால் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே அவ்வாறு ஏற்கெனவே கசடு சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டிருப்பின், அதனை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் போது, சேதமடைந்து மாற்றப்பட வேண்டிய நிலைகளில் இருக்கும் மனித நுழைவாயில் மூடிகளை மாற்ற வேண்டும். புதிதாக போடபப்டும் மூடிகளின் தரம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள்.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

அதோடுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளை இதுவரை தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும்போது, பள்ளங்கள் தோண்டப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் பள்ளங்கள் தோண்டப்படும் போது அருகிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!

அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணைத்து மழைநீர் வடிகால் பணிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவுறும் வகையில் இலக்கு நிர்ணயித்து பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios