Asianet News TamilAsianet News Tamil

Chennai containment areas :கொரோனாவுடன் சகஜமாக ஊர்சுற்றும் சென்னைவாசிகள்..! தலைநகரில் விபரீதம்.

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 8 ஆயிரம் தெருக்கள் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த தெருக்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
 

Chennai containment areas increase
Author
Chennai, First Published Jan 17, 2022, 6:02 PM IST

அதாவது, சென்னையில் இன்று நிலவரப்படி 57,591 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் வெறும்8 ஆயிரம் தெருக்களில் மட்டும் 50 ஆயிரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால், மீதமுள்ள சுமார் 31,000 தெருக்கள் கொரோனா அற்றவைகளாக இருக்கின்றன. இந்த 8 ஆயிரம் தெருக்களிலும் ஒவ்வொரு தெருவிலும் சுமார் 6- 7 கொரோனா பாதித்தவர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாத மத்தியில் சென்னையில் 2 ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா நோயாளிகளே இருந்தனர். இதனால் 850 தெருக்கள் மட்டுமே கட்டுபடுத்தப்பட்டவைகளாகவும் , அதில் சராசரியாக 2 நோயாளிகளே இருந்தனர். ஆனால் தற்போது புள்ளிவிவரங்களுடன் பார்த்தால், வீடுகளில் கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது குடும்ப உறுப்பினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் எளிதில் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது என்பது ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 23,989 ஆக இருந்த நிலையில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 குறைந்து புதிதாக 23,975 ஆக பதிவாகியுள்ளது. 1,40,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,975 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,975 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,987 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் ஒருவர் தனக்கு அறிகுறி தென்பட்டவுடன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த பிறகும், வெளியூரிலிருந்து வந்த பிறகும் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல், பரிசோதனை முடிவு வந்தவுடன் மட்டும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுவதால் தான் எளிதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு என பலருக்கும் எளிதில் கொரோனா பரவிவிடுகிறது என்று சுகாதாரத்துறையினர் கூறுக்கினறனர்.

இதுப்போல, இந்த மாத தொடக்கத்தில் , எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில்  17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதற்கு காரணம், மும்பையிலிருந்து வந்தவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியில் சுற்றியதால் , அவரது குடும்பத்தில் 7 பேருக்கும் , அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என தெரிய வந்தது.

இதனால், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டவர்கள், முடிவு வரும் வரையிலும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்  என சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வைட்டமின் சி மற்றும் சிங்க் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios