கடற்கரை முதல் தாம்பரம் வரை.. 44 மின்சார ரயில்கள் ரத்து.. ஆனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் - முழு விவரம்!
Chennai Suburban Trains : ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்பட உள்ள பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட உள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை, அவ்வப்போது நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக தடைபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படுகின்ற 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால், இதனால் பயணிகள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்னக ரயில்வே விடுத்த அந்த கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக போக்குவரத்து கழகம், நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு
ரயில்தடம் பராமரிப்பு பணிகள் நாளை காலை 10:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறும் என்றும், இந்த நேர இடைவெளியில் இந்த 150 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வழித்தடங்களில் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.