திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுராந்தகம் அருகே அதிவேகத்தில் சென்ற கார் நிலைத்தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- என் பொண்ணையே லவ் பண்ணுவியா.. கூலிப்படை வைத்து காதலனின் கதையை முடித்த தந்தை.. கண்டும் காணாமல் இருந்த காதலி.!
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் முழு விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
