checking in the entrance of neet exam
முழுக்கை சட்டை அணிந்திருந்த மாணவர்களின் சட்டையைஅரைக்கையாக கத்தரித்தும், மாணவிகளின் ஜடையை அவிழ்த்தும் சோதனை செய்த பின்னரே நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதை சட்டமாக இயற்ற தமிழக அரசு தவறிவிட்டது. இதனால் தற்போது மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இந்த நீட் தேர்வு இன்று நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தன.
அதில், மைக்ரோ போன், கடிகாரம், காகிதத் துண்டுகள், பென்சில் பாக்ஸ், பவுச், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், அட்டை, பென் டிரைவ், ரப்பர், லாக் அட்டவணை, ஸ்கேனர் உள்ளிட்டவை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மேலும், மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், பேட்ஜ், சட்டை பின், கைக் கடிகாரம், ப்ரேஸ்லெட், உள்ளிட்ட அணிகலன்களையும் பெண்கள் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைக்கு ஹேர்பின் கூட குத்தக் கூடாதாம். ஆடையில் பெரிய பட்டன்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது போதாது என்று தேர்வறைக்கு செல்வதற்கு முன்பு முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் அணிந்திருந்த முழுக்கை சட்டையை கத்தரிக்கோலால் கத்தரித்து அரை கை சட்டையாக மாற்றிய பின்னரே தேர்வரைக்குள் அனுமதிக்கபட்டனர்.
அதேபோல், பெண்கள் வாரிக்கொண்டு வந்த தலைமுடிகளை அவிழ்த்து சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல பெண்கள் தலைவிரி கோலத்தோடு தேர்வு எழுத சென்றனர்.
ஏற்கனவே நீட் தேர்வு மாணவ மாணவிகளுக்கு கஷ்டத்தை கொடுத்து வந்தது. இந்நிலையில், இந்த சோதனை நடவடிக்கை மாணவ மாணவிகளை மீண்டும் மற்றோதொரு கஷ்டத்திற்கு ஆளாக்கி உள்ளது.
