Asianet News TamilAsianet News Tamil

வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தமிழில் ஒரே ஒரு மாணவன் மட்டும் சென்டம்..

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Check TN Tamil Nadu Board SSLC 10th Result 2022 at www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in
Author
Tamil Nadu, First Published Jun 20, 2022, 12:14 PM IST

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 90.96 % யும், மாணவிகள் 94. 38% யும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 8.55% அதிகமாக மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆம் வகுப்பில் தமிழ் தேர்வில் ஒருவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும் 1 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.25% அரசுப்பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. அதே போல் 4,006 பள்ளிகளில் 100% மாணவர்களும் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மொத்தம் 886 அரசுப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.12 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 90.07 % ஆக தேர்ச்சி குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க:இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி அதிகம்.. அடிச்சு தூக்கிய பெரம்பலூர்..!

10 ஆம் வகுப்பு தேர்வில் 97.22 % பெற்று,  கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. வேலூர் மாவட்டம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: 10ம் வகுப்பு தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்.. எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சென்டம்? முழு விவரம் இதோ
 

Follow Us:
Download App:
  • android
  • ios