Asianet News TamilAsianet News Tamil

மக்களே அலர்ட் !!! நாளை இந்த பகுதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- நாகர்கோவில், மதுரை- செங்கோட்டை, நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 

Change in Train Services in many route  - Southern Railway announcement
Author
First Published Oct 17, 2022, 4:53 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தாம்பரம்‌-நாகர்கோவில்‌ இடையே இரவு 11 மணிக்கு புறப்படும்‌ அந்தியோதயா விரைவு ரயில்‌  (வண்டி எண்‌:20691) இன்று திண்டுக்கல்‌ மற்றும்‌ நாகர்கோவில்‌ இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக நாகர்கோவில் ‌- தாம்பரம்‌ இடையே மதியம்‌ 3.50 மணிக்கு புறப்படும்‌ அந்தியோதயா விரைவு ரயில்‌ நாளை நாகர்கோவில்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்‌ திண்டுக்கல்லில்‌ இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்‌.

மேலும் படிக்க:திருச்சி மாவட்டத்தில் நாளை (18-10-2022) இந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது!!

அதே போல் செங்கோட்டை- மதுரை இடையே காலை 7 மணிக்கு புறப்படும்‌ விரைவு ரயில்‌ (06662) நாளை விருதுநகர்‌ மற்றும்‌ மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் மறுமார்க்கமாக மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், மாலை 5.15 மணிக்கு புறப்படும்‌ விரைவு ரயில்‌ நாளை மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்‌ விருதுநகரில்‌ இருந்து மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும்‌.

நாகர்கோவில்‌-கோவை இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும்‌ விரைவு ரயில்‌  (16321) நாளை நாகர்கோவில்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்‌ திண்டுக்கல்லில்‌ இருந்து மதியம்‌ 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்‌.மறுமார்க்கமாக கோவை-நாகர்கோவில்‌ இடையே காலை 8 மணிக்கு புறப்படும்‌ விரைவு ரயில்‌ நாளை திண்டுக்கல்‌ மற்றும்‌ நாகர்கோவில்‌ இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:மதுரையில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி தங்கக்காசு பணம் பறித்த இளைஞர் கைது!!

Follow Us:
Download App:
  • android
  • ios