திருச்சி மாவட்டத்தில் நாளை (18-10-2022) இந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது!!
திருச்சி மாவட்டத்தில் நாளை (18-10-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் நாளை (18-10-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை 110/11கி.வோ துணை மின் நிலையம் மற்றும் சிறுகமணி 33/11 கி.வோ துணை மின் நிலையங்களில் அவசரகால மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை (18.10.2022) செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டி தங்கக்காசு பணம் பறித்த இளைஞர் கைது!!
பெட்டவாய்த்தலை, பழையூர்மேடு, பழங்காவேரி, காந்திபுரம், தேவஸ்தானம், சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், வள்ளுவர் நகர், சிறுகமணி, பெருகமணி, சிறுகாடுதோப்பு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, கோட்டையார் தோட்டம், பொய்யாமணி, சவாரிக்காடு, கருங்காடு, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்தில் சொத்து தகராறு..! பிரபு, ராம்குமார் ஏமாற்றிவிட்டதாக புகார் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதேபோல் எஸ். கவுண்டம்பட்டி, குறிச்சி, ஒத்தக்கடை, சூரியணூர், பாறைப்பட்டி, நடைபாலம், முதலைப்பட்டி, பொறைக்கிலான் கவுண்டம்பட்டி, இனுங்கூர், நங்கவரம், அனஞ்சணூர், மேல்நங்கவரம், கீழ்நங்கவரம், தமிழ்சோலை, காமராஜர்நகர், வாரிக்கரை, பங்களாபுதூர், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.