ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. எந்தெந்த ரயில்கள் ரத்து.. இதோ முக்கிய தகவல்கள்..!

நெல்லை ரயில்வே யார்டு பகுதிகளில் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Change in train service.. Southern Railway announcement

நெல்லை ரயில்வே யார்டு பகுதிகளில் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* நெல்லை - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06675) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06680) இன்று முழுமையாக ரத்து.

* நாகர்கோவில் - தாம்பரம் வரை செல்லக்கூடிய அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் (20692) இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.

* பாலக்காடு - திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயில்  (16731) இன்று பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். 

* திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) இன்று திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.

* நெல்லை - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (06409) இன்று மாலை 4.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.00 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios