change in private schools fees

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை வரைமுறைபடுத்துவதற்கான சட்ட மசோதாவை இன்று சட்டமன்றத்தில், பள்ளி கல்வி துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார்.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏராளமானபுகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடந்தது. இதையடுத்து, கடந்த 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது.

கட்டண நிர்வய குழுவின் வழிகாட்டுதல்படி கட்டண நிர்ணயம் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2013ம் ஆண்டு முதல் 2016 வரையி கட்டண நிர்ணய குழு சிங்காரவேலன் தலைமையில் செயல்பட்டது. இதையடுத்து, தற்போது மாசிலாமணி தலைமையில் கட்டண நிர்ணய குழு செயல்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2009 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.