சந்திரயான் - 3 செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கா.மு சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நடந்தது. இதில் 75வது பிறந்த நாள் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், ‘காஞ்சிபுரத்தில் செயற்கைக்கோள் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லவர்கள் வாழ்ந்த தலைநகரமாக விளங்கிய காஞ்சியில், அண்ணாதுரை பிறந்த காஞ்சியில் எதை ஆரம்பித்தாலும் வெற்றி பெற முடியும்.'டெவலப் இந்தியா விஷன்' நடத்துவதற்கு மாணவர்களால் தான் முடியும். 

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் அதிகமாகி உள்ளது. மாணவர்களின் அறிவுத் திறமை வளரும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும். சந்திரயான் - 3 செயற்கைக்கோள், இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படஉள்ளது. இதற்கான டிரயல், டெஸ்டிங் தற்போது நடந்து வருகிறது. 

சூரியனுக்கு, ஆதித்யா என்ற செயற்கைக்கோள், இஸ்ரோவில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விடப்பட உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் மானிட்டர் செய்யும். நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

அதன்படி, பள்ளி, கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. சுனாமி வருவதை முதலில் கண்டுபிடிக்கும் வகையில், சுனாமி வார்னிங் சென்சார்ஸ் போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பாடத்தை கற்று தருகிறோம். 

இதில், 500 பேர் பங்கேற்றனர். 110 பேரை தேர்வு செய்து ஹரிகோட்டாவுக்கு அழைத்து சென்று, செயற்கைக்கோள் ஏவும் விதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தோம். இதில், 25 மாணவர்களை தேர்வு செய்து, ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளோம். வெளிநாடுகள் பலவும், இந்தியாவிற்கு வந்து இங்கிருந்து செயற்கைக்கோள் விடுவதில் ஆர்வம் காட்டிவருகின்றன’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.. மெட்ரிகுலேசன் இயக்குநரகம் எச்சரிக்கை !