மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் 5 சவரன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கார்த்திகேயினி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மதுரை அவனியாபுரத்தில் சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் கார்த்திகேயினியின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்று அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து கார்த்திகேயனி போலீசாரிடம் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.