காஞ்சிபுரம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அரளி விதை சாப்பிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கெங்கம்மாள் (40). இவரது கணவர் ஏழுமலை. இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால், இருவரிடமும் பேச்சுவார்த்தை இல்லை.

சம்பவத்தன்று, கெங்கம்மாளுக்கும், அவரது கணவருக்கும் வாக்குவாதம் வலுத்தது. அவரது கணவர் சண்டைப் போட்டுவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த கெங்கம்மாள் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏழுமலை வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது, அங்கு கெங்கம்மாள் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து கதறி அழுது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கெங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.