CITU held in protest in collector office

தூத்துக்குடி

உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் தொழிலாளர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைப்பெற்றது.

இந்த போராட்டத்துக்கு இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலு, சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய பண பயன்களை வழங்காதது, உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் தொழிலாளர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்திப் பேசினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். நேற்று காலை முதல் தொடர்ந்து போராட்டம் நடந்தது. மதியம் நீண்ட நேரம் ஆனதால், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதியம் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமாரைச் சந்தித்து சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு.வை சேர்ந்த பொன்ராஜ், குமாரவேல், இசக்கிமுத்து, மோகன்தாஸ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.