Rameswaram fishermen killed agony worrying Ministry of External Affairs said

ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம் 

பிரிட்சோ கொல்லப்பட்டது குறித்து வெளியறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து இலங்கை பிரதமரிடம் இந்திய தூதர் வேதனை தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை உறுதி அளித்தாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கை அரசின் மறுப்பு

எல்லை தாண்டி வரும் மீனவர்களை கைது செய்யவே கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் உயிரி்ழந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் இப்பிரச்சனையில் விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.