cbi raid in chidambaram house
முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் சிபிஐ அமைப்பினர் பல்வேறு தரப்பினர் வீடுககில் சோதனை நடத்தி வருகின்றனர், அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார், கீதா லட்சுமி உள்ளிட்ட பல முக்கியமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்,
இதே போன்று காரைக்குடி அருகில் உள்ள மானகிரி கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சாதனை நடைபெற்று வருகிறது
வாசன் ஐ கேர் நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் வந்தது தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரம் மிக்க பதவியில் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த சோதனை பெருத் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது
