Asianet News TamilAsianet News Tamil

வேலியே பயிரை மேய்ந்ததா? வருமான வரித்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு!

CBI case against income tax officer
CBI case against income tax officer
Author
First Published Sep 22, 2017, 6:07 PM IST


வருமான வரித்துறை கமிஷனர் ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரின் கணவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மார்க்புரம் கோ ஆப்ரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் - விஜயலட்சுமி.

விஜயலட்சுமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மேல்முறையீட்டு பிரிவில் கமிஷனராக உள்ளார். இவரின் கணவர் சுரேஷ், ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார்.

சுரேஷ் தன்னுடைய ரயில்வே வேலையை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

சுரேஷ் - விஜயலட்சுமி, 2010 ஆம ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சுமார் ஒரு கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக சிபிஐக்கு புகார்கள் வந்தன.

விசாரணையில் சுரேஷ் - விஜயலட்சுமி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios