மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்  காவிரி கரை கொள்ளாமல் பயங்கர வேகத்தில் பொங்கிப் பாய்கிறது, கரையை உடைத்துக் கொண்டு குமாரபாளையம் – சேலம் செல்லும் சாலையில் பெருகி ஓடுவதால் அந்த சாலை வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று மேட்டூர்- எடப்பாடி சாலையிலும் காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலை வழியே செல்லும் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒக்னேக்கல் பகுதி முற்றிலும் மூழ்கடித்து காவிரி ஆறு பொங்கிப் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருவதால், மேட்டூர் அணையும் நிரம்பி வழிகிறது.

மேட்டூர் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியைத் தாண்டி 120.31 அடி உள்ளதால்  கர்நாடகாவில் இருந்து வரும் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இது போன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். நாமக்கல், ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து திறந்து விடப்படும் நீர் அதன் கரை கொள்ளாது பல இடங்களில் கரையை உடைத்துக் கொண்டு சாலைக்கு வரத் தொடங்கியுள்ளது, முக்கியமாக குமாரபாளையம் – சேலம் செல்லும் சாலையில் காவிரி நீர் பெருகி ஓடுவதால் அந்த சாலை வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று மேட்டூர்- எடப்பாடி சாலையிலும் கரையிலிருந்து ஓவர்ஃபளோ ஆகி காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலை வழியே செல்லும் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாகாவிலும், கேரளாவிலும் அடுத்த 4 நாட்களுக்கு மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்படும் என்பதால் என்ன ஆகுமோ என கரையோர மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.