5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை !
தமிழகத்தில், 5 மாவட்டங்களில், மிக கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. அதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில், பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியுள்ளதாவது; மேற்கு திசையில் இருந்து வரும் காற்று, மேலும் வலுவடைந்து உள்ளது. இதனால், தமிழகத்தில், கோவை, நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மற்ற பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம்.சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் அடுத்து 2நாளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச்சலனத்தால் தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என கூறியுள்ளார் .