Asianet News TamilAsianet News Tamil

0% செய்கூலி, சேதாரம் என கூறி மோசடி.. தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு..

மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Case filed against the absconding owners of Pranav Jewellery who involved in forgery Rya
Author
First Published Oct 19, 2023, 3:04 PM IST | Last Updated Oct 19, 2023, 3:04 PM IST

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை முதலீடு பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 0% செய்கூலி, சேதாரம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தான் பிரணவ் ஜுவல்லரி.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த ஜுவல்லரி குறுகிய காலத்திலேயே மதுரை, கும்பகோணம், கோவை, ஈரோடு, சென்னை என பல இடங்களை கிளைகளை தொடங்கியது. 5 லட்சம் முதலீடு செய்தால் 2% வட்டி., 10 மாதங்களுக்கு பிறகு செய்கூலி சேதாரமின்றி 106 கிராம் நகை பெறலாம் என பல அதிரடி விளம்பரங்களை செய்தது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் பழைய நகைகளை கொடுத்தால், ஒரு வருடம் கழித்து செய்கூலி, சேதாரமின்றி பழைய நகைகளின் எடைக்கு சமமாக புதிய நகைகளை பெறலாம் என்றும் விளம்பரம் செய்தது. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளிலும் பணத்தை முதலீடு செய்தனர். மேலும் பழைய நகைகளை கொடுத்து, ஒரு வருடம் கழித்து புதிய நகைகளை வாங்கலாம் என்று ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தனது நகைகளை அடுத்தடுத்து மூடியது. திருச்சியில் உள்ள தனது நகைக்கடையையும் மூடியது.

 

சென்னை புழல் சிறையில் நடப்பது என்ன? சத்தமே இல்லாமல் நடக்கும் கொடூர சம்பவங்கள்! பகீர் கிளப்பும் அன்புமணி!

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மதுரை, திருச்சி, சென்னை என பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரிக்கு எதிராக மோசடி புகார் அளித்துள்ளனர். திடீரென நகைக்கடையை மூடி தலைமறைவான கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios