Car driver fines - Trichy people condemned
கார் ஓட்டியவரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்று கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இது திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்ட காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்ற பிறகு, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதையடுத்து, திருச்சி மாநகரம் முழுவதும போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, கல்லணை அருகே வேங்கூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது, ஜெயராஜ் என்பவர் அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். காரை நிறுத்தி போலீசார் ஆவணங்களை சரிபார்த்தனர். ஜெயராஜ், ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தார். போலீசாரிடம் அவர் உரிய ஆவணங்களை காண்பித்தார். அது மட்டுமல்லாது ஜெயராஜ், கார் ஓட்டி வரும்போது சீட் பெல்ட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலீசார் அவரிடம், ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் வசூலித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை அவரை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
