விருத்தாச்சலம்

சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென புளிய மரத்தின் மீது தீப்பிடித்ததில் இருவர் பலியாயினர்.

விருத்தாச்சல – வேப்பூர் சாலையில் நள்ளிரவில் TN 4 AB 7837 என்ற கார் சென்றுக் கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதாலும், நீண்ட நேரம் பயணம் என்பதாலும் ஓட்டுநர் கண் அயர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், நிலை தடுமாறியது. இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது கார் பலமாக மோதியுள்ளது.

இந்த மோதலில் கார் சுக்குநூறாக நசுங்கியது. மோதிய வேகத்தில் கார் உடனே தீப்பிடிக்கத் தொடங்கிற்று.

தீப்பிடித்த காரில் இருந்து யாரும் வெளிவரவில்லை.

இதில், காரை ஓட்டிக் கொண்டு வந்தவரும், அருகில் இருந்தவரும் கார் மோதிய வேகத்திலேயே இறந்து இருக்கக் கூடும் என்று தெரிகிறது.

கார் முழுவதும் தீப்பிடித்த எரிந்ததில் உள்ளே இருந்தவர்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் கருகி இருந்தனர்.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தில் இறந்தவர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றினர். மேலும், இறந்தவர்கள் யாரென்று அடையாளம் தெரிந்துக் கொள்ள விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.