Car accident in kilpauk one man caused to death

கீழ்பாக்கத்தில் சைக்கிள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மோத்தி. இவர் இன்று காலை சைக்கிளில் வெளியே சென்று வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சாலையில் தறிகெட்டு வந்த சொகுசு கார் ஒன்று மோத்தியின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் எலக்ட்ரீசியன் மோத்தி சம்பவ இடைத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சொகுசு காரில் வந்தவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சொகுசு காரில் வந்து விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.