அமித்ஷா இறங்கினால் வெற்றி தான். தமிழகத்தில் அமித்ஷா சூத்திரத்தை பயன்படுத்துவோம் அதில் திராவிட மாடல் ஆடப்போகிறது என திருப்பூரில் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பாஜக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் மற்றும் மாநாடு திருப்பூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அரசியல் சூழல் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் தேசியத்தின் வளர்ச்சி ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் மற்றும் உதயநிதி கூறும் வார்த்தைகள் அவர்களின் அச்சத்தை காட்டுகிறது. ஆனால் 200 ஜெயிப்போம் என கூறி அவர்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். எல்லா வகையிலும் தோல்வி அதனால் பயத்தில் உள்ளனர். பீகார் தேர்தலுக்கு பிறகு பயம் இன்னும் அதிகமாகி உள்ளது. வரும் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் அதிக கட்சிகள் சேரும். இது கணிப்பு அல்ல இதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டதால் தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறோம்.

ஆளுங்கட்சியின் ஆட்டம் ஒரேயடியாக முடியப் போவதை பார்ப்போம். ராகுல்காந்தி மனநலம் சரியில்லாதவர் ஓட்டு திருட்டு என்பது சாத்தியமா? வேறு விஷயங்கள் கிடைக்காததால் காலாவதியான அவர்களை வீழ்த்தும் பேச்சு.

நீதிமன்றத்தை மதிக்காததில் திமுகவை தவிர்த்து வேறு கட்சிகளை காட்ட முடியாது. இந்த அரசின் மக்கள் விரோத போக்கு திருப்பரங்குன்றம் மூலமாக இன்னும் அதிகமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒரு சமுதாயம் மீது உள்ள பயம் காரணமாகவும் காலம் தாழ்த்தவும் மேல் முறையீடு செய்யப்படுகிறது. அமித்ஷா இறங்கினால் அது வெற்றி தான். பீகாரில் மிகப்பெரிய வெற்றி, ஹரியானா வெற்றி அந்த வெற்றியை தமிழகத்தில் உறுதி செய்வாரா என திமுக அச்சப்படுகிறது.

அமித்ஷா சூத்திரத்தை பயன்படுத்துவோம் அதில் திராவிட மாடல் எப்படி ஆடப்போகிறது பாருங்கள். தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவதை யாரும் தடுக்க முடியாது. வந்தால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வரும் உலறல் இது. மாநில அரசு எவ்வளவு வேண்டுமானாலும் வாக்காளர்களை சேர்க்க முடியும் ‌ அதனால் தான் மத்திய அரசு நேரடி ஆய்வு செய்தது. ஃபுட்பால் பிளேயர் வந்ததில் எவ்வளவு நிர்வாக சீர்கேடு, காத்திருந்த மக்களை ஏமாற்றியது. தேர்தல் வருவதால் ஓட்டு போய்விடும் என மன்னிப்பு கேட்டுள்ளனர். எஸ் ஐ ஆர் என்பது மக்களுக்கு கிடைத்த வரம் ஏமாற்றுபவர்களுக்கு சவுக்கடி. பிஜேபி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற பிம்பம் உடைந்து வருகிறது என தெரிவித்தார்.