Asianet News TamilAsianet News Tamil

தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க மக்களை வற்புறுத்தினால் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை…

Cable operators license will be canceled if forced people to buy a private setup box
Cable operators license will be canceled if forced people to buy a private setup box
Author
First Published Aug 4, 2017, 8:46 AM IST


தேனி

தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தனியார் செட்-ஆப் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் மக்களைக் கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் புகார் வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“அரசு கேபிள் தொலைகாட்சி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு, அரசு சார்பில் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம், அரசு கேபிள் தொலைக்காட்சியில் உயர் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அரசு கேபிள் தொலைக்காட்சி உள்ளூர் ஆபரேட்டர்கள் சிலர், தனியாக செட்-ஆப் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நடவடிகையில் ஈடுபடும் கேபிள் தொலைகாட்சி உள்ளூர் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios