cabinet meeting started in TN secretary
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, பதவியேற்ற பிறகு நடைபெறும் ஐந்தாவது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், எதிராமங்கலம் பிரச்சனை, ஜி.எஸ்.டி. பிரச்சனை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின்போது, குடியரசு தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிகிறது.
மேலும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம், கதிராமங்கலம் பிரச்சனை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகே எந்தெந்த விஷயங்கள் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.
