சென்னையை கலக்கும் மெட்ரோ ரயில்.! ஒரே ஆண்டில் இத்தனை கோடி பேர் பயணமா.?

சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் மட்டும் பல கோடி பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். 

By the end of 2024 10.52 crore people have traveled by Chennai Metro train KAK

சென்னை மெட்ரோ ரயில் சேவை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம் வேலை தேடி பல ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வருகை புரிகிறார்கள். மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் வாகனங்களின் நெரிசல் அதிகமாக உள்ளது.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல மணி நேரம் செலவிடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.  சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நீண்ட தூரம் உள்ள இடத்திற்கும் விரைவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

By the end of 2024 10.52 crore people have traveled by Chennai Metro train KAK

ஒரே ஆண்டில் இத்தனை கோடி பேர் பயணமா.?

இந்த நிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020-ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும் 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.

By the end of 2024 10.52 crore people have traveled by Chennai Metro train KAK

20 சதவிகிதம் தள்ளுபடி

ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு, பயணச்சீட்டு, பயண அட்டைகள் போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத்தள்ளுபடி வழங்குகிறது.  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios