But the true miracle 7 Sri Lankan fishermen arrested in Indian territory intruder
தூத்துக்குடி
அதிக அளவில் மீன்களை பிடிப்பதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஏழு பேரை கைது செய்த கடலோர பாதுகாப்பு காவலாளர்கள், குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் பிடித்து வைத்திருந்த 4 டன் மீன்களை ஏலம் விட்டு, படகுகளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடலோர காவல்படை சுற்றுக் கப்பல் வைபவ் சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தூத்துக்குடியில் இருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரிந்தது.
உடனடியாக கடலோர காவல் படையினர் சென்று, குவிஷாபுத்தா என்ற அந்த படகைச் சுற்றி வளைத்தனர். இலங்கை அம்பகண்டவிளையைச் சேர்ந்த தினேஷ்குமார், அந்தோணி சாந்தா திசாரே, பிரபாத் அத்தநாயகா, சுமித் ரயான்சி, அஜித் சிசாரா குமாரா, பிரமோத், சுனில் அத்தநாயகா ஆகிய ஏழு மீனவர்கள் இருந்தனர். அந்த ஏழு மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு கடலோர காவல்படை சுற்றுக் கப்பலான ஆதேஷ் மூலம் படகு மற்றும் மீனவர்கள் தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்பட்டு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுபற்றி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இலங்கை மீனவர்கள் புத்தளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க வந்த இவர்கள் நீண்ட நாள்களாக கடலில் தங்கி மீன்பிடித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 4 டன் வரை மீன்களை பிடித்து படகில் வைத்துள்ளனர். மேலும், அதிக அளவில் மீன்களை பிடிப்பதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று ஒத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களையும் இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
மேலும், இவர்கல் படகில் இருந்த 4 டன் மீன்கள் ஏலம் விடப்பட்டன.
