buses attack in tamilnadu

பேருந்துகள் இயக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சு, கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வேலை றிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்கள், அண்ணா தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர்,தற்காலிக பணியாளர்கள் ஆகியோரை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை அண்ணா நகர், குரோட் பேட்டை, பேரூர் முஆகிய பகுதிகளில் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதே போன்று விழுப்புரம், கோபி செட்டிபாளையம், செய்யாறு ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இதில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

பல இடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிமனைகள் முன்பும், சாலைகளிலும் அமர்ந்து தொழிலாளர்கள் மேறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.