போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடிரூபாயைஉடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும்... போக்குவரத்து ஊழியர்களுக்காக நீதிமன்றத்தால்வழங்கப்பட்ட தீர்ப்பையும், ஒப்பந்தத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

 பணிஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களுக்கு 1,500 கோடி ரூபாய்வழங்கிட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  வரும் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து 15 ஆம் தேதி முதல் பஸ்கள் ஓடாது என்ற அச்சம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினருக்கும் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று 3 ஆவது கட்டமாக அமைச்சர் எம்.ஆர்.பிஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும், வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் இதை ஒப்புக் கொள்ளாத தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததையடுத்து, திட்டமிட்டபடி வரும் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத்துறை தனிஆணையம்  நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாசிம் பேகம்  தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.