bus driver wear in helmet
ஊதிய உயர்வு கோரி பஸ் டிரைவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
மக்களின் அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகின்றது.
மேலும் போக்குவரத்து ஊழியர்கள் கேட்ட ஊதிய உயர்வை அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
ஆனால் கேட்டதை தராமல் வண்டியை எடுக்க நாங்களும் முன்வர மாட்டோம் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலை நீடித்து வருகிறது.
தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்து இயக்குவதால் ஆங்காங்கே பல பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதில் பலர் படுகாயங்களும் அடைகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது நாங்கள் எதையாவது செய்து மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும், அல்லது வேறு ஐடியா இருந்தாலும் கொடுங்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் மக்கள் பேருந்துகள் பக்கம் செல்லவே பயப்படுகின்றனர்.
இந்நிலையில் கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க டிரைவரான எஸ்.எஸ். சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மர்ம நபர்கள் ஆங்காங்கே அரசு பேருந்துகள் மீது தாக்குதலில் ஈடுபடுவதால் கோவையில் இருந்து கோபிக்கு சென்ற பேருந்தில் டிரைவர் சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கி வருகின்றார்.
