காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கனரக வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கனரக வாகனம் மீது, எதிர்திசையில் வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் , உடனே சம்பவ இடத்திற்குச் சென்று பேருந்தில் இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினருக்கு இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மீட்கப்பட்ட அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்து மோதிய வேகத்தில், பேருந்துக்குள் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து, விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து எதனால் ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.