30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...! ஒருவர் பலி

சேலத்தில் தனியார் பேருந்து 30 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

bus accident

சேலத்தில் தனியார் பேருந்து 30 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பெங்களூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 28 பயணிகளுடன் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் அதிவேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. bus accident

இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 16-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 bus accident

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 5 கிரேன்களின் உதவியுடன் பேருந்தை தூக்கி நிறுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த விபத்து ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios