விமான நிலையத்தில் பாக்கெட் பாக்கெட்டாக சிக்கிய இ-சிகரெட்.. கடத்தல் கும்பலுக்கு செக் வைத்த சுங்கத்துறை
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்த போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் அதிகரிக்கும் இ சிகரெட் ஆர்வம்
இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் இந்த அரசு தடை விதித்துள்ளது. நிக்கோட்டின், நீர், கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் எனப்படுகிறது. இந்தியாவில் இ- சிகரெட் உற்பத்தி, தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் இ-சிகரெட் தொடர்பான விளம்பரம் அனைத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2000 முதல் 3,000 ரூபாய் மதிப்புள்ள, இ - சிகரெட் விற்பனையை, 2019ல் தடை செய்தது. ஆனால், இளைஞர்களை கவரும் வகையில் 'ஸ்டைலான' தோற்றத்தில் வெளியாகும் இந்த சிகரெட் புதிய போதை 'பிராண்ட்' ஆக மாறி உள்ளது. பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் இ-சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
வருமான வரி ரீஃபண்ட் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்போ இது கூட காரணமா இருக்கலாம்.. நோட் பண்ணுங்க..
பாக்கெட் பாக்கெட்டாக சிக்கிய இ சிகரெட்
இருந்த போதும் வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு சுவைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் இ சிகரெட்டிற்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூரில் இருந்து படிக் ஏர்லைன்ஸ் விமானம் வந்து இறங்கியது.
அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 2 பயணிகள் உடமைகளில் தடை செய்யப்பட்ட அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதி இல்லாத இ.சிகெரெட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 1285 இ.சிகெரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.