Building Infringement case Corresponding Supreme Court Order to the High Court
விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டங்கள் குறித்து டிராஃபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் ஒருவாரத்திற்குள் மாநகராட்சி ஆணையம் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டும் போது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், தி.நகரில், சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ பிடித்ததிற்கு காரணம் அரசு அதிகாரிகள் தான் எனவும் தெரிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும், விதிமீறல் கட்டடங்கள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தி.நகரில்,விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்எனவும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிமீறல் கட்டட வழக்குகள் அனைத்தையும், ஜூலை, 10ல் விசாரணைக்காக பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒருவாரத்திற்குள் மாநகராட்சி ஆணையம் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.
