பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து அதன் அதிகாரிகள் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சங்கத்தின் அகில இந்திய  பொதுச் செயலர் செபாஸ்டின் மீது  பிஎஸ்என்எல் நிர்வாகம் குற்றப்பத்திரிகை வழங்கியுள்ளதைக்  கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்தப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சங்க (எஸ்என்இஏ) மாவட்டத் தலைவர் ரோஸ் சிரில் சேவியர் தலைமை தாங்கினார்.

அதன் அகில இந்தியப் பொருளாளர் ராஜன், சங்க நிர்வாகிகள் இந்திரா, விஜயன், அச்சுதானந்த் ஆகியோர் பேசினர். 

இதில், எஸ்என்இஏ சங்க உறுப்பினர்கள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.