Bribe for delivery .. !!! Mother and child deaths awful

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் லஞ்சம் கேட்டு கொடுக்க முடியாத நிலையில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சஜிதா நிறைமாத கர்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சஜிதாவின் பிரசவத்திற்காக கேரளா மாநிலம் பாறசாலை அரசு மருத்துவமனையில் ராஜன் சேர்த்துள்ளார். அவருக்கு பிரசவம் பார்க்க மருத்துவர் நித்யா ராஜேஷ் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணம் புரட்டுவதற்கு காலதாமதமானதால் சஜிதாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு உயிரிழந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, சில நிமிடங்களில் சஜிதாவும் உயிரிழந்தார்.

மருத்துவர் லஞ்சம் கேட்டது குறித்து, சஜிதாவின் உறவினர்கள் பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், திருவனந்தபுரம் கோட்டாட்சியர் திவ்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.