Breast Cancer:சென்னை பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு
சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத்துறை இணைந்து அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத்துறை இணைந்து அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-2018ம் ஆண்டுக்கான தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு அறிக்கையின்படி, “ சென்னையில் வசிக்கும் பெண்களில் ஒரு லட்சம் பேருக்கு 52 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 2006-2011ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 27.5 ஆக இருந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று க்ரூட் இன்சிடன்ஸ் ரேட்(CIR) குறிப்பிடுகிறது.
நாகாலாந்தில் நசுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி: ஒரு இடம் கூட இல்லை!
CIR என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட மக்கள்தொகையில் நிகழும் பாதிப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
அடையாற புற்றுநோய் தடுப்பு மையத்தின் தொற்றுநோய் பிரிவு இணைப் பேராசிரியர் மருத்துவர் பி. சம்பத் கூறுகையில் “மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் சென்னையில் வாழும் பெண்களில் 83.4 என்ற அளவில் இருக்கிறது. இது 2016-18ம் ஆண்டில் 69.6 ஆக இருந்தது.
புற்றுநோய் பதிவேடு புள்ளிவிவரங்கள்படி, கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் 2006-2011ல் 14.3 பேராக இருந்தது. ஓவரி 6.1 ஆகவும், கருப்பைபுற்றுநோய் 3.1 ஆகவும் இருந்தது. இது 2016-2018ல் கருப்பைவாய் புற்றுநோய் 11.5 ஆகக் குறைந்தது. ஆனால், கருப்பைப்புற்றுநோய் 7.5 ஆகவும், ஓவரி 9.6 ஆகவும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகர்புறங்களில் அதிகரி்த்து வருகிறது.
நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக2 பெண் எம்எல்ஏக்கள் | யார் இந்த குர்ஸே, ஜக்காலு?
பெருநகரங்களில் உள்ள பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் அதிகரித்துவருவது குறித்து சிறப்பு நிபுணத்துவ ஆய்வு அவசியம். தொடர் பரிசோதனை முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெண்கள் மத்தியில் அதிகப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணை இயக்குநர் மருத்துவர் ஆர் சுவாமிநாதன் கூறுகையில் “ நகர்ப்புறங்களில் பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் அதிகரித்து வருகிறது. பெண்கள் சுயமாகவே மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும்.
பெண்கள் மார்கப்புற்றுநோய் இருப்பது தெரிந்து தொடக்கத்திலேயே சிகிச்சைக்கு அதாவது முதல் மற்றும் 2ம் கட்டத்தில் வந்துவிடுவது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குகூட அடிக்கடி பரிசோதனை அவசியம். ஆனால், பரிசோதனை அடிக்கடி பெண்கள் செய்வதில்லை. அவர்களுக்கு அறிகுறி தெரிந்தால் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்திர தாங்கேகர் வெற்றி: பாஜகவுக்கு பின்னடைவு
அரசு கஸ்தூரிபாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு நிபுணர் மருத்துவர் சி சுமதி கூறுகையில் “உடற்பயிற்சிஇல்லாமல் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை, உடல்பருமன், நீரிழிவு நோய், குடும்பப் பாரம்பரியம் ஆகியவை பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரக் காரணமாகும். ஆதலால், பெண்கள் உடல்பருமனாவதைத் தடுக்கவேண்டும். மாதவிடாய் காலத்துக்குப்பின் பெண்கள் சுயமாக மார்கப்பரிசோதனை செய்ய வேண்டும் கல்லூரிக் காலத்தில் இருந்தே இந்தப் பழக்கம் வர வேண்டும்”எனத் தெரிவித்தார்
ஆண்களுக்கான பொதுவான புற்றுநோய் விவரம்
2016 முதல் 2018வரை சென்னையில் ஆண்கள் தொண்டை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டை புற்றுநோய் 12.7 ஆகவும், வாய் புற்றுநோய் 12.3 ஆகவும், புரோஸ்டேட் புற்றுநோய் 9.9 ஆகவும், வயிற்றுப் புற்றுநோய் 9.3ஆகவும் இருக்கிறது