Breaking released jayalalithaas patient care report
ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22_ல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு தயாரிக்கப்பட்ட ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ டில் இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிலுள்ள தகவல்களின் ஹைலைட்ஸ் பாயிண்ட்ஸ்...
* 10 மணிக்கு போயஸிலிருந்து அப்பல்லோவுக்கு போன்.
* 10.01 க்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து போயஸ் நோக்கி கிளம்பியது.
* 10.05 க்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை அடைகிறது.
* போயஸ் கார்டன் இல்லத்தின் முதல்மாடியில் தனது அறையில் படுத்த நிலையில் இருந்திருக்கிறார்.
* செமி கான்ஸியஸ் நிலையில், மருத்துவர்களின் ‘மேடம்’ அழைப்புக்கு ‘ம் ...ஆங்’ என்றே பதிலளித்திருக்கிறார்.
* ஜெ., உடலில் எங்குமே காயமோ, புண்களோ இல்லை (சசி தப்பித்தார்)
* ஜெ.வுக்கு அதே இடத்தில் மருத்துவ சோதனை ஆரம்பமானது.
* ஜெயலலிதாவின் பிபி அளவு 140/70 இருந்திருக்கிறது. சாச்சுரேஷன் (ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு 100 இருக்க வேண்டும்) 48 என்றே இருந்திருக்கிறது. இது அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்பதை காட்டியிருக்கிறது.
* டெம்ப்ரேச்சர் நார்மல். அதற்கு முந்தைய நாட்களில் ஃபீவர் வந்து சென்றது அருகிலிருந்தவர்களால் மருத்துவக்குழுவிடம் பகிரப்பட்டிருக்கிறது.
* ஜெயலலிதாவுக்கு அப்போதிருந்த சர்க்கரையின் அளவு 508.
* அவரது அறையிலேயே ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்ததும் சாச்சுரேஷன் அளவு 98 ஐ தொட்டது. இதன் மூலம் வீட்டிலேயே மிக மிக அபாயகரமான நிலையை தொடுவதிலிருந்து ஜெயலலிதா காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
* 10: 25க்கு ஜெயலலிதாவுடன் ஆம்புலன்ஸ் அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது.
டாக்டர்கள் புடை சூழ அதி தீவிர ட்ரீட்மெண்ட் துவக்கம்...
