Break the door of the house and burglar in the village - the horror at Hosur

ஓசூரில் பட்டபகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் வாசவி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலைதான் வீடு திரும்புவார். வழக்கம்போல் இன்றும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை பணி முடிந்ததும் வீடு திரும்பியுள்ளார். வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு ஆனந்தன் தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.