Asianet News TamilAsianet News Tamil

நாளை முதல் திருப்பூரில் புத்தகக் கண்காட்சி; பார்வையாளர்களை ஈர்க்க புதுப்புது சலுகைகள்...

Book Fair in Tirupur from tomorrow New offers to attract visitors ...
Book Fair in Tirupur from tomorrow New offers to attract visitors ...
Author
First Published Jan 24, 2018, 10:25 AM IST


திருப்பூர்

பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15-வது புத்தகத் திருவிழா திருப்பூரில் நாளை முதல் தொடங்குகிறது.

புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் எஸ்.ராஜகோபால், அறங்காவலர் அ.நிசார் அகமது ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

"திருப்பூர் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக, புத்தக வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தை உணர்த்தி, மக்களின் சமூக அக்கறையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா திருப்பூரில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு 15-வது புத்தகத் திருவிழா ஜனவரி 25-ஆம் தேதி (அதாவது நாளை) முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை 11 நாள்கள், காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெறுகிறது.

141 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், என்சிபிஎச், விடியல் பதிப்பகம், சாகித்ய அகாதெமி, காலச்சுவடு, விஜயா பதிப்பகம், கிழக்குப் பதிப்பகம், விகடன், அலைகள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இஸ்லாமிய புத்தக நிலையம், ஈஷா பௌண்டேஷன் உள்பட தமிழகத்தின் 55 முன்னணி பதிப்பகங்கள், முன்னணி புத்தக விற்பனையாளர்கள் என மொத்தம் 94 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

கடந்தாண்டு புத்தகக் கண்காட்சிக்கு 60 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். ரூ. 1.25 கோடிக்குப் புத்தகங்கள் விற்பனையாகின.

இந்தக் கண்காட்சியில் வாங்கு அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதாம் தள்ளுபடி வழங்கப்படும். ரூ. 1000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு நூல் ஆர்வலர் சான்று வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தலா ரூ. 500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

புதுமை முயற்சியாக, பள்ளிகளில் நூலகத்தை சிறப்பாக பயன்படுத்த முனைப்புடன் இருக்கும் நூறு பள்ளிகளைத் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்குத் தலா ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும்.

ஏற்கெனவே, மாணவர் திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு இந்த விழாவின்போது பரிசுத் தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். பங்கேற்ற 10 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகள் மூலமாக வழங்கப்படும்.

நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக அரங்குகள் திறந்திருக்கும். அத்துடன் நாள்தோறும் காலை 11 மணிக்கு கல்வி அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், தொலைநோக்கி மூலமாக வான்நோக்கு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மாலையில் கருத்தரங்குகள், பட்டிமன்றம் உள்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் கிடையாது" என்று தெரிவித்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios