நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ம் தேதி துபாயில் உயிரிழந்தார். அவரது உடல் துபாயிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சட்டவிதிகளின் படி, நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அதன்பிறகு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் அஸ்தியை எடுத்துக்கொண்டு அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் குடும்பத்தினருடன் தமிழகம் வந்துள்ளார். 

தனிவிமானம் மூலம் சென்னை வந்த அவர்கள், நீலாங்கரையை அடுத்த அக்கரையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கினர். அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று, ஸ்ரீதேவியின் அஸ்தியை கடலில் கரைத்து சடங்குகளை செய்ய உள்ளனர்.