சென்னை திநகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து வாடிக்கையாளர்கள் கடையில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

1970 களில் பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி பணிக்க நாடார் குடியிருப்பு. இன்றைக்கு வறண்ட ஊர். திருச்செந்துாருக்கு அருகே இருக்கிறது. அங்கே இருந்து பிழைக்க சென்னைக்கு வந்தனர் 3 சகோதரர்கள். செல்வரத்னம், ராஜரத்னம், யோகரத்னம் என்பது அவர்களின் பெயர்கள்.

ஆரம்பத்தில் சென்னை வீதிகளில் சுக்கு காப்பி விற்றார் செல்வரத்னம். அப்புறம் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இன்றைய சென்னை ரங்கநாதன் தெருவின் சின்ன பாத்திரகடை ஆரம்பித்தார்கள்.

இப்போது சென்னையில் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் கடைகள்.

சென்னை திநகர் தவிர்த்து பாடி, புரசைவாக்கம் என பல இடங்களில் பல அடுக்குமாடி கடைகள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி பிஸினஸ். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் ரீடெயில் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன.  இதில் மிகவும் பிரபலமானது சரவணா ஸ்டோர்ஸ். 

இங்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து வாடிக்கையாளர்கள் கடையில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.