துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக மீனவர் ராஜாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழக மீனவர் ராஜாவின் உடலை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் பெற்று சென்றனர்.

சேலம் மாவட்டம் கோவிந்தபாடியை அடுத்த அரசிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா கடந்த 14 ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை வனப்பகுதிக்கு வேட்டைக்காக சென்றுள்ளார்.

அப்போது கர்நாடக வனத்துறையினருக்கும், வேட்டைக்கு சென்றவர்களை விரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் ராஜா என்னவானார் என்பது தெரியாமல் இருந்தது.

திமுக, அதிமுகவிற்கு ஆதரவாக ஒரே நாளில் களத்தில் குதிக்கும் கமல்ஹாசன், அண்ணாமலை..! திக்குமுக்காடும் ஈரோடு தொகுதி

இதனிடையே கடந்த 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து ராஜா சடலம் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால்தான் ராஜா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்ய ராஜா குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர்.

முதல்வரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சேலத்தில் திடீர் ஆய்வு

Abdul Kalam Satellites: 150 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்

இதனையடுத்து நேற்று மாலை அரசு மருத்துவர் கோகுலரமணன் மற்றும் ராஜா குடும்பத்தினர் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ராஜாவின் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை என தகவல் வெளியானதால் அவரது குடும்பத்தினர் சடலத்தை வாங்க மீண்டும் மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர், நேற்று இரவு சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து சடலத்தை பெற்றுக்கொள்ள ராஜா குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராஜாவின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

உச்சகட்ட கோபத்தில் சிறுபான்மையினர்.. ‘அங்க’ மட்டும் தயவு செஞ்சு போகாதீங்க! அண்ணாமலைக்கு தடை போட்ட அதிமுக