அப்துல் கலாம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறக்கட்டளையுடன் ஸ்பேஸ் ஜோன் இந்தியா, மாா்ட்டின் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் செயற்கைக் கோள்கள் ஏவும் திட்டம் 2023’ திட்டத்தை உருவாக்கியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 5000 பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக 150 செயற்கைக்கோள்கள் இன்று காலை 7.30 மணி அளவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன.

திமுக, அதிமுகவிற்கு ஆதரவாக ஒரே நாளில் களத்தில் குதிக்கும் கமல்ஹாசன், அண்ணாமலை..! திக்குமுக்காடும் ஈரோடு தொகுதி

இந்த நிகழ்வில் தெலுங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர், "செயற்கைக் கோள் உள்ளிட்ட விண்வெளி திட்டம் குறித்த மாணவர்களின் ஆர்வம் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவிடும்" என்று குறிப்பிட்டார்.

மாணவ மாணவிகள் தயாரித்த 150 செயற்கைக்கோள்கள் 65 கிலோ எடை கொண்ட ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்டாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக ரூ. 2.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 500 மாணவ மாணவிகள் இந்தச் செயற்கைக் கோள்கள் உருவாக்கத்தில் பங்களித்துள்ளனர்.

பிகோசாட் எனப்படும் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் காற்றின் தரம், அழுத்தம், காற்றில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அறிய முடியும். ஓசோன் படலத்தைப் பற்றி, வெளிமண்ட வெப்பநிலை பற்றி என்று பல்வேறு தகவல்களை இந்த 150 செயற்கைக்கோள்கள் மூலம் பெறமுடியும்.

பெண்களுக்கான உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என தெரியுமா.?முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்