நீலக் குறிஞ்சி மலர்கள் க்கான பட முடிவுநீலகிரி

நீலகிரி மலைப் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலைப் பகுதி முழுவதும் நீலப் போர்வை போர்த்தியதுபோல ரம்மியாமாய் காட்சியளிக்கிறது. புதுப்பொலிவுடன் இருக்கும் இம்மலர்களை காண ஏராளமான மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்து இரசிக்கின்றனர்.

நீலகிரி க்கான பட முடிவு

மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் 'நீலகிரி'. இங்கு 65% வனப்பகுதிதான். சோலைக் காடுகளையும், புல்வெளிகளையும், முள் புதர்களையும் ஏராளமாய் கொண்டது நீலகிரி. இதனால்தான் உயிர் சூழல் மண்டலத்தில் நீலகிரி முக்கியமான அங்கத்தை வகிக்கிறது. 

பலவிதமான தாவரங்களையும், காட்டு விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நீலகிரிக்கு இப்பெயர் வர முக்கிய காரணம் இங்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும் 'நீலக்குறிஞ்சி' மலர்கள்தான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டருக்கு மேலிருக்கும் மலைப் பகுதியில் மொத்தம் ஒன்பது வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றனர். இதில் நீலக்குறிஞ்சி மலருக்கு எப்பவும் தனிச்சிறப்புண்டு. 

நீலக் குறிஞ்சி மலர்கள் க்கான பட முடிவு

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருக்கும் இம்மலர்கள் பொதுவாக ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை பூத்துக் குலுங்கும். மலைப் பகுதி முழுவதும் நீலப் போர்வை போர்த்தியதுபோல ரம்மியாமாய் காட்சியளிக்கும். இதனால்தான் இதற்கு நீலகிரி என்று பெயர் வந்தது. 

இப்போது சீசன் நேரம் என்பதால் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் உதகமண்டலத்தில் உள்ள கல்லட்டி மலைப் பகுதியில் மீண்டும் பூத்துக்குலுங்க ஆரம்பித்துள்ளன. பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி மலர்களால் கல்லட்டி மலைப்பகுதியே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இது இப்பகுதி மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து இரசித்துவிட்டு செல்கின்றனர்.