Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் மரணங்கள் - செந்தில் பாலாஜி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

டாஸ்மாக் மரணங்கள் தொடர்பாக செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

BJP TN  president annamalai urges senthil balaji to resign on mayiladurai tasmac dead
Author
First Published Jun 13, 2023, 10:31 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்கள். இந்த மர்ம மரணங்கள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டாஸ்மார் மதுபானம் அருந்தியதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் மரணங்கள் தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Viral video நீங்க நம்பலனாலும் இதான் உண்மை: பாம்பை தின்ற மான்!

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?

பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.

 

 

உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் கள்ளச்சாரயம் அருந்தி சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதேபோல், டாஸ்மாக் மதுவை குடித்து இரண்டு பேர் உயிரிழந்தனர். விசாரணையில் சயனைட் கலந்த மதுவை அவர்கள் குடித்ததாக தெரியவந்தது. அதேபோல், தனது ஆசை அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்தடுத்த மரணங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios