Viral video நீங்க நம்பலனாலும் இதான் உண்மை: பாம்பை தின்ற மான்!
காட்டுப் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மான் ஒன்று பாம்பை மெல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது வனவிலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான, அற்புதமான வீடியோக்களை அரிய தகவல்களுடன் அவர் வெளியிடுவதும் உண்டு.
அந்த வகையில், மான் ஒன்று பாம்பை சாப்பிடும் வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், காட்டுப் பகுதியில் உள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்த மான் ஒன்று பாம்பை மெல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மான்கள் தாவர உண்ணிகளாகக் கருதப்படுகின்றன. அவை முதன்மையாக தாவரப் பொருட்களையே முக்கிய உணவாக உட்கொள்கின்றன. ஆனால், அந்த வீடியோவில் மான் ஒன்று பாம்பை மென்று கொண்டிருக்கிறது. இந்த அரிய காட்சியை அப்பகுதியில் காரில் சென்ற ஒருவர் படம்பிடித்துள்ளார்.
;
அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுசந்தா நந்தா, “கேமராக்கள் இயற்கையை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆம். தாவரவகை விலங்குகள் சில சமயங்களில் பாம்புகளை உண்ணும்” என பதிவிட்டுள்ளார்.
“நேஷனல் ஜியோகிராஃபிக் படி, மான்களுக்கு பாஸ்பரஸ், உப்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் கிடைக்காத சமயத்தில், குறிப்பாக குளிர்கால மாதங்களில் தாவரங்களின் குறைவாக கிடைக்கும் போது, அவை மாமிசம் சாப்பிட வாய்ப்புள்ளது.” என நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது.
CoWIN இணையதளம் தனிப்பட்ட நபரின் பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கவில்லை; மத்திய அரசு பதிலடி!!
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள Science Girl என்ற ட்விட்டர் பக்கம், “மான்கள் தாவரவகைகள் மற்றும் ருமினன்ட்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இது செல்லுலோஸ் போன்ற கடினமான தாவரப் பொருட்களை ஜீரணிக்க உதவுகிறது. ஆனால் உணவு பற்றாக்குறையாக இருந்தால் அல்லது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் குறைவாக இருந்தால், அவை இறைச்சியை உண்ணலாம்.” என பதிவிட்டுள்ளது.